For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

NEET PG 2024 | நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி..!! - உச்சநீதிமன்றம் அதிரடி

SC Refuses To Interfere With NEET PG 2024, Says 'Will Not Re-schedule Exam
04:53 PM Aug 09, 2024 IST | Mari Thangam
neet pg 2024   நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி       உச்சநீதிமன்றம் அதிரடி
Advertisement

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம். ஒருசில மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

முதுநிலை நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் ரூ. 70 ஆயிரம் வரை வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டெலிகிராம் குழுவில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது தொடர்பாகவும் புகார்கள் எழுந்தன. மத்திய அரசின் தேசிய தேர்வு வாரியம் இதனை மறுத்தது.

அதனைத்தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று (09.08.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ” மாணவர்கள் எதற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேர்வுகளும் மிகப்பெரிய அளவில் நடக்கிறது. அப்படி இருக்கும் பொழுது சிறு சிறு விஷயங்கள் என்பதை நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தை 50 மாணவர்கள் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள் என்பதற்காக ஒத்திவைக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை வதள்ளிவைப்பது என்பது முடியாத காரியம்' என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Read more ; வயநாடு நிலச்சரிவு..!! பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்காத ரஜினி..!! என்ன காரணம்..?

Tags :
Advertisement