முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

SBI வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை.. ரூ.64,480 சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

SBI Clerk Notification 2024 for Junior Associates in Customer Support and Sales Division has been published in public sector bank SBI Bank.
12:10 PM Dec 18, 2024 IST | Mari Thangam
Advertisement

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு (SBI Clerk Notification 2024) தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Advertisement

காலி பணியிடம் :

* தேசிய அளவில் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

* இப்பதவிக்கு தமிழ்நாட்டில் மட்டும் 336 காலிப்பணியிடங்களும், புதுச்சேரியில் 4 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

* இப்பணியிடங்களில் எஸ்சி - 63, எஸ்டி - 2, ஒபிசி - 91, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 33, பொதுப் பிரிவினருக்கு - 150 என்ற வகையில் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு :

* எஸ்பிஐ வங்கி கிளார்க் பிரிவு பணிக்கு 01.04.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 20 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது. அதே போன்று அதிகபடியாக 28 வயதிற்கு அதிகமாக இருக்கக்கூடாது. விண்ணப்பதார்கள் 02.04.1996 தேதிக்கு முன்பும் 01.04.2004 தேதிக்கு பின்பும் பிறந்திருக்கக்கூடாது.

* இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி :  விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree)முடித்திருக்க வேண்டும். இரண்டு பட்டப்படிப்புகள் (IDD) இணைத்து பட்டப்பெற்றவர்கள் 31.12.2024 தேதி அல்லது அதற்குள் கல்வியை முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டில் இருக்கும் மாணவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், பட்டப்படிப்பு முடிவு தேதி டிசம்பர் 31 ஆக இருக்க வேண்டும்.

சம்பள விவரம் : எஸ்பிஐ கிளார்க் பிரிவில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 என்ற விதம் சம்பளம் வழங்கப்படும். இதில் தொடக்கமே அடிப்படை சம்பளமாக ரூ.26,730 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://bank.sbi/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் உள்ள (- Recruitment of Junior Associates 2024) ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை தகுந்த தகவல்களுடன் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி. மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

Read more ; புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன்.. மூளைச்சாவு அடைந்து கவலைக்கிடம்..!! வாய் திறக்காத அல்லு அர்ஜூன்..

Tags :
Junior AssociatesSales Divisionsbi bankSBI Clerk
Advertisement
Next Article