நைட் தூங்கும் போது கதவ தட்டி அழைப்பாங்க.. அந்த தமிழ் நடிகர் ஜன்னல் வழியே.. ச்சீ!! - நடிகை ஷகீளா பகீர்
ஹேமா கமிட்டியின் அளித்துள்ள நம்பிக்கைதான் பலரை இன்று தைரியமாகப் பேச வைத்துள்ளது எனக் கூறிய ஷகீலா.. எல்லா மொழி திரைப்படத் துறையிலும் இதேபோன்ற குழுவை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை தற்போது வெளியாகி பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நடிகர் மோகன்லால் உட்பட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் கேரளாவில் நடிகை ஷகீலா அளித்த பேட்டி ஒன்று பரபரப்பாக மாறியுள்ளது. அவர் மலையாள திரைப்பட உலகில் இருப்பதைப் போலவே தமிழ் சினிமாவில் அதிகம் நடைபெறுகிறது என்றும் அதைவிடத் தெலுங்கு சினிமாவில் பாலியல் சீண்டல்கள் அதிகம் நடக்கின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தொடர்ந்து பேசிய ஷகீலா, 2000 ஆம் ஆண்டில், தனது திரைப்படங்களைத் தடை செய்ததற்கும், அவை தணிக்கைக்கு வருவதைத் தடுப்பதற்கும் கேரள நடிகர் சங்கம் தான் காரணம் என்று ஷகீலா குற்றஞ்சாட்டியுள்ளார். இது பற்றி ஷகீலா கூறுகையில், "நான் என்ன தவறு செய்தேன்? நான் படங்களில் நடித்தேன். திரையரங்குகள் திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டு வந்ததைத் தடுக்கும் விதமாக மீண்டும் ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் இழுத்துக் கொண்டு வந்தேன், என் படங்களிலிருந்து அரசுக்கு வழிவருவாய் வந்தது. நான் என்ன தவறு செய்தேன்?" என்றார்.
கூடவே, "தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து சினிமா துறையிலும் இந்தப் பாலியல் பிரச்சினை உள்ளது. பாலிவுட்டில் Nepotism தான் உள்ளது. அங்கே தென்னிந்திய சினிமாவில் நடப்பதுபோல் இல்லை. இங்கே வாய்ப்பு தரும்போது நடிகையிடம் அஜெஸ்மெண்ட் பற்றிச் சொல்லி விடுகிறார்கள். இவரை அனுசரித்துப் போக வேண்டும் எனப் பேசி வைத்துவிட்டுத்தான் வாய்ப்பே தருகிறார்கள்" என்கிறார் ஷகீலா.
தொடர்ந்து பேசிய ஷகீலா, "வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் கேரள சினிமாவுக்குள் வந்து அதிகம் பணம் சம்பாதித்தால் அவரை எளிதில் விட்டுவைக்கமாட்டார்கள். எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த விவகாரம் பற்றிக் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து பேசி வருகிறேன். ஆனால் எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், "ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள திரைத்துறையினர் இரவில் போய் கதவு தட்டி அழைப்பார்கள் என்று கூறியுள்ளது. அது தமிழ்நாட்டிலும் நடக்கிறது. நானே பார்த்துள்ளேன். நான் அங்கிள் என்று கூப்பிடும் ஒரு பெரிய நடிகரே அதை செய்துள்ளார். ஜன்னல் வழியே கையை விட்டு நடிகை படுக்கை காலை இழுத்துள்ளார்கள். ஹேமா கமிட்டியின் அளித்துள்ள நம்பிக்கைதான் பலரை இன்று தைரியமாகப் பேச வைத்துள்ளது என்பதை இவர் ஒப்புக்கொண்டார். எல்லா மொழி திரைப்படத் துறையிலும் இதேபோன்ற குழுவை அமைக்கவேண்டும் என்று அழைப்பும் விடுத்துள்ளார்.
Read more ; அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தால் மரணம் கூட நிகழும்..!! ஆரோக்கியமாக இருக்க இதை பண்ணுங்க..!!