For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Dhoni: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!... வைரலாகும் தல தோனியின் வீடியோ!...

06:40 AM Mar 27, 2024 IST | Kokila
dhoni  திரும்ப வந்துட்டேன்னு சொல்லு     வைரலாகும் தல தோனியின் வீடியோ
Advertisement

Dhoni: நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரர் விஜய் சங்கரின் விக்கெட்டை தனது சிக்னேச்சர் விக்கெட் கீப்பிங் கேட்ச் மூலம் தோனி எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ், ரச்சின் ரவீந்திர களம் இறங்கி முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். அதன்படி ருதுராஜ், ரச்சின் ரவீந்திர இருவரும் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய ரஹானே 12 ரன்கள், சிவம் துபே 51 ரன்கள், டேரில் மிட்செல் 24*, சமீர் ரிஸ்வி 14 ரன்கள் மற்றும் ஜடேஜா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது.

அதன்படி ஓப்பனிங் இறங்கிய விருத்திமான் சாஹா வெறும் 21 ரன்களில் ஆட்டமிழந்து குஜராத் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஓகே கேப்டன் இருக்காரே என்று ரசிகர்கள் நினைக்க சுப்மன் கில் வெறும் 8 ரன்களில் LBW முறையில் அவுட்டாகி ரசிகர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கினார். தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சாய் சுதர்சன் மட்டும் நிதானமாக விளையாடி 37 ரன்களை சேர்த்தார்.

இவரை தொடர்ந்து டேவிட் மில்லர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றியை நோக்கி கொண்டுசெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரும் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 143 ரன்கள் எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது. அசத்தலான பேட்டிங், பௌலிங் மூலம் சென்னை அணி சென்னை மண்ணில் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே மீண்டும் அதே மண்ணில் குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை ருசித்துள்ளது.

அதன் ஒருபகுதியாக, கிரிக்கெட்டை எப்போதுமே கேட்சஸ் வின் மேட்ச்சஸ் என்று சொல்வார்கள். அதாவது கேட்சை பிடித்தால் அது ஆட்டத்தையே வெல்லும் வாய்ப்பை ஏற்படும் என்பதுதான். அந்த வகையில் 42 வயதான தோனி இன்று பிடித்த ஒரு கேட்ச் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் அணியின் கேப்டன் கில் எட்டு ரன்களிலும் விதர்மன் சாகா 21 ரன்களிலும் ஆட்டம் இழக்க, மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இருவருமே தமிழக வீரர்கள் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற நுணுக்கங்கள் தெரியும். இதனால் இவர்களது விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் இன்று பந்து வீசினார். அப்போது விஜய் சங்கர் அடித்த பந்து ஸ்லிப்பை நோக்கி சென்றது. அங்கு ஸ்லிப்பில் யாரும் இல்லை. இந்த நிலையில் 42 வயதான தோனி திடீரென்று பாய்ந்து அந்த கேச்சை அபாரமாக பிடித்தார். இதனை பார்த்தவுடன் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Readmore: வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும்…!

Tags :
Advertisement