’சவுக்கு சங்கருக்கு கோவை சிறையில் சமாதி’..!! ’கையை உடைத்தது இவர் தான்’..!! பகீர் தகவல்..!!
அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் தொடர்பாக தொடர்ந்து யூடியூப் மூலம் விமர்சித்து வந்தவர் சவுக்கு சங்கர். இவர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மேலும், சவுக்கு சங்கர் பயன்படுத்திய காரில் இருந்து போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பல வழக்குகளும் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக கோவை சிறையில் அடைக்கப்பட்ட போது சவுக்கு சங்கரின் கைகளை போலீசார் சுற்றி நின்று தாக்கியதாகவும், இதில் அவரது கை உடைக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, மதுரை நீதிமன்றத்தில் வலது கையில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கரை போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். முன்னதாக மருத்துவமனையில் சவுக்கு சங்கர் உடல் நலம் தொடர்பாக ஆய்வுக்காக அழைத்துச் சென்றனர். அப்போது வீடியோ கேமராவை பார்த்த சவுக்கு சங்கர் எனது கையை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் என கூறினார். மேலும், கோவை சிறையில் தான் சமாதி என மிரட்டுவதாகவும், என்னை கொலை செய்துவிடுவார்கள் என பகீர் தகவலை தெரிவித்தார்.