For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"எனது கணவரின் உயிரை காப்பாற்றுங்கள்.." ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கருணைமனு.!

04:59 PM Feb 11, 2024 IST | 1newsnationuser7
 எனது கணவரின் உயிரை காப்பாற்றுங்கள்    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கருணைமனு
Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கடந்த 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் ராபர்ட் பயாஸ் ஜெயக்குமார் மற்றும் சாந்தன் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில் தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுத்து அவரது உயிரை காக்க வேண்டும் என அவரது மனைவி நளினி தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது தொடர்பாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் அவர் தனது கணவர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அங்கு அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. மேலும் கைதி போல் நடத்தப்பட்டு வருகிறார்கள். எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும் அவரை இலங்கை தூதரகம் அழைத்துச் சென்று பாஸ்போர்ட் எடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அவருக்கான அடிப்படை சுதந்திரம் கூட மறுக்கப்படுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கணவருக்கு முகாமில் நடைபெச்சி செய்யக்கூட அனுமதி வழங்கப்படுவதில்லை எனக் கூறியிருக்கிறார். முகாமில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் எதுவும் ஒழுங்காக இல்லை. எனது கணவருடன் முகாமில் இருந்த சாந்தன் தற்போது கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனது கணவரும் மனம் உடைந்த நிலையில் காணப்படுகிறார் . சிறையில் அவர்களுக்கு முழுமையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதில்லை .

கடந்த முறை எனது கணவரை சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். மேலும் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருவதால் 12 நாட்களுக்கு மேலாக உணவு சாப்பிடாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே இந்த கடிதத்தை பரிசீலித்து எனது கணவரின் உயிர் காக்க கருணையுடன் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக முருகன் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் தங்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவதாக கூறி 12 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ராபர்ட் பயாஸ் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement