செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்!. மத்திய அமைச்சருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வலியுறுத்தல்!
ரிலையன்ஸின் ஜியோ 480 மில்லியன் பயனர்களுடன் இந்தியாவின் நம்பர் 1 தொலைத் தொடர்பு நிறுவனமாக உள்ளது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி செயற்கைக்கோள் மூலம் கைப்பேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் பிற தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது, அதற்கான விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை கண்டறிவது குறித்த ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டது.
இந்தநிலையில், செயற்கைக் கோள் மூலம் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கம் , நிலத்தில் டவர்கள் அமைத்து இதே சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் அலைக்கற்றை(ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமற்ற நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, ரிலையன்ஸின் மூத்த ஒழுங்குமுறை விவகார அதிகாரி கபூர் சிங் குலியானி, இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிர்வாக ரீதியாக இருக்க வேண்டும் என்று எந்த அடிப்படையும் இல்லாமல் டிராய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதாவது, கடந்த அக்டோபர் 10ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில், தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், அமேசான் நிறுவனத்தின் குப்பியர், பாரதி குழுமத்தின் ஒன்வெப் யூடெல்சாட் மற்றும் எஸ்இஎஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கை கோள்கள் மூலம் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் ஏற்கனவே நிலத்தில் டவர்கள் அமைத்து தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கி வரும் நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள் மூலம் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கும் நேரடி போட்டி ஏற்படவுள்ளது.
இதனை கருத்தில்கொண்டு இந்த இருவகையான நிறுவனங்களுக்கும் சமமான வணிக சந்தையை ஏற்படுத்தி தர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் அனைத்து தரப்பினரிடமும் கருத்துகேட்காமல், டிராய் தன்னிச்சியாக இந்த விவகாரத்தில் முடிவெடிப்பதை போல் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் டிராய் நிராகரித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி, சந்தை தேவை மற்றும் விநியோகம், அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தபட்ட, ஏல முறைகள் செயற்கைக்கோள் கைபேசி சேவைகளுக்கான நிர்வாக நடைமுறையை வகுத்தல், குறித்து டிராய் அல்லது தொலைத்தொடர்பு துறை முழுமையாக ஆய்வு நடத்தவில்லை. இந்த சூழலில் டிராய் வெளியிட்டுள்ள அறிக்கை, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், முதலில் வருபவர்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும் நடைமுறையும் மீறும் வகையில் உள்ளது.
எனவே, செயற்கைக்கோள் மூலம் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நிராகரிக்க வேண்டும், எவ்வித பாகுபாடுமின்றி உச்சநீதிமன்ற தீர்ப்புகள், சட்டவிதிகளுக்கு உட்பட்டு நியாயமான வெளிப்படைத் தன்மையுடைய பாரபட்சமற்ற முறையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: டிரம்ப் மீது 3வது முறையாக கொலை முயற்சி!. துப்பாக்கி, போலி பிரஸ் கார்டுடன் இருந்த நபர் கைது!