சஞ்சு சாம்சன், சிவம் துபே!… 7 வீரர்கள் நீக்கம்!… இன்று இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதல்!
T20 World Cup 2024: 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா -அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்தநிலையில் 7 வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றமளித்துள்ளது.
கடந்த ஓராண்டில் இந்திய டி20 அணி நிலையான 11 வீரர்கள் கொண்ட அணியை கண்டறியவில்லை என்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் உள்ளது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கப் போவது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தான் என உறுதியாக கூறப்படுகிறது. அந்த வகையில் மூன்றாம் வரிசையில் நிலையான அதிரடி பேட்ஸ்மேன் ஒருவர் ஆட வேண்டும். அதற்கு ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கம் போல நான்காவது வரிசையில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார்.
இந்த நான்கு வீரர்களை தாண்டி பந்துவீச்சாளர்களாக ஆறு வீரர்கள் இடம் பெற்றே ஆக வேண்டும். அந்த வகையில் ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி தற்போது ஆட உள்ள இதே நியூயார்க் மைதானத்தில் தான் நடைபெற்றது. அப்போது பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதை அடுத்து சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேலுக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்க ரோஹித் சர்மா விரும்புவார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆறு மற்றும் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்வார்கள். தற்போது மீதமுள்ள ஐந்தாம் வரிசையில் யாரை களம் இறக்குவது? என்ற குழப்பம் உள்ளது. இந்த இடத்தில் அதிரடி பேட்ஸ்மேன் ஒருவர் ஆட வேண்டும். அவரும் ஃபினிஷராகவும் செயல்பட வேண்டும். இதற்கு சஞ்சு சாம்சன் அல்லது சிவம் துபே ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
சிவம் துபே கடந்த ஐபிஎல் தொடரில் இதே ஐந்தாம் வரிசையில் களமிறங்கி அதிரடியாக ஆடி இருந்தார். ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் அவர் ஃபார்ம் இழந்தாலும் அவருக்கு ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்வதில் அதிக அனுபவம் உள்ளது. மறுபுறம் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக டாப் ஆர்டரில் தான் பேட்டிங் ஆடி இருந்தார். இருவருமே தற்போது பயிற்சி போட்டியில் பேட்டிங்கில் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.
அந்த 7 வீர்கள் யார்? இதில், கே.எல்.ராகுலின் விடுபட்டது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் . இருப்பினும், அவரது ஸ்ட்ரைக் ரேட் ஒரு பிரச்சினையாக இருந்தது. கடந்த டி20 உலகக் கோப்பையும் அவரது பேட்டிங் ஏமாற்றமளித்தது. மேலும் கடந்த 18 மாதங்களில் அவர் டி20 அணியில் இடம் பெறாதது மற்றொரு அடையாளமாக இருந்தது. தினேஷ் கார்த்திக் கடந்த முறை ஒரு ஆச்சரியமான தேர்வாக இருந்தார், ஆனால் அவர் மீண்டும் பார்க்கப்படவில்லை.
முகமது ஷமி தனது குதிகால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறார், ஆகஸ்ட் மாதம் வரை ஓய்வில் இருப்பார். தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 திட்டத்தில் இல்லை, எனவே அவர்களும் தவிர்க்கப்பட்டனர். இந்தியா இந்த முறையும் ஒரு ஆஃப்-ஸ்பின்னரைப் பார்த்திருக்கலாம், ஆனால் ஏற்கனவே நான்கு ஸ்பின்னர்கள் அணியில் இருப்பதால், ஆர் அஷ்வினும் திட்டத்தில் இல்லை.
இந்தநிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய டி20 உலகக் கோப்பை 2024 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி , சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் , ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
Readmore: திகில் படம் பார்த்தால் உடல் எடையை குறைக்கலாம்!… கலோரிகள் எரிக்கப்படுகிறது!… காரணம் இதோ!