மருத்துவமனை குளியலறையில் பெண் டாக்டர் ஆபாச படம்.! கைது செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளி.! அதிர்ச்சியில் நிர்வாகிகள்.!
மும்பையின் செம்பூர் பகுதியில் இயங்கி வரும் சதாப்தி கல்லூரி மருத்துவமனை விடுதியில் பெண் டாக்டர் குளிக்கும் போது அதனை வீடியோ எடுத்ததாக துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மும்பை சதாப்தி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருபவர் அசோக் குப்தா. இவர் அந்தக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்று வரும் 27 வயது பெண் மருத்துவர் விடுதி அறையில் குளித்துக் கொண்டிருப்பதை தனது செல்போனில் படம் எடுத்து இருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அசோக் குப்தாவை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை ஆய்வு செய்ததில் மருத்துவரின் வீடியோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது இபிகோ செக்ஷன் 354 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மருத்துவமனை விடுதியில் இளம் டாக்டர் ஆபாசமாக படம் எடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களும் நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர்.