சானியா, கர்மானுக்குப் பின் கோப்பையை வென்ற 3-வது இந்திய வீராங்கனை..!! யார் இந்த சஹாஜா..?
அமெரிக்க ஐ.டி.எஃப். தொடரில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை சஹாஜா யமலபள்ளி கோப்பையை வென்று அசத்தியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மகளிருக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அவர், அமெரிக்காவின் அமி ஜூவுடன் மோதினார். இதில், சஹாஜா 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
புரோ டென்னிஸ் சானியா, கர்மானுக்குப் பின் கோப்பை வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமை சஹாஜா யமலபள்ளி பெற்றுள்ளார். ஏற்கனவே மூன்று ITF ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ள சஹாஜா யமலாபல்லி, SoCal Pro தொடர் பட்டத்தை வென்றதன் மூலம் மற்றொரு பட்டத்தை சேர்த்துள்ளார். சாம் ஹூஸ்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 2009ஆம் ஆண்டில் இரினா சோட்னிகோவாவின் சாதனையைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது டென்னிஸ் வீராங்கனையாகப் பெயரிடப்பட்ட வரலாற்றைப் படைத்தார்.
சஹாஜா பிப்ரவரியில் உலகின் 92-வது நிலை வீராங்கனையான கெய்லாவை தோற்கடித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு ஐடிஎஃப் டபிள்யூ25 சோலாப்பூரில் நடந்த போட்டியில் உலகின் 186-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எகடெரினா மகரோவாவை வீழ்த்தினார்.