இந்தியாவை அச்சுறுத்தும் சாண்டிபுரா வைரஸ்!. 9 பேருக்கு பாசிட்டிவ்!. அறிகுறிகள் இதோ!
Sandipura virus: குஜராத் மாநிலத்தில் 9 பேருக்கு சாண்டிபுரா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குஜராத்தில் சாண்டிபுரா வைரஸ் தாக்குதலுக்கு 4 குழந்தைகள் பலியாகினர். 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழந்தை, ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த 1 குழந்தை உள்பட 4 குழந்தைகள் சாண்டிபுரா வைரஸ் தாக்குதலால் கடந்த 10ம் தேதி உயிரிழந்து விட்டனர்.
ராஜஸ்தானை சேர்ந்த மேலும் 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சபர்கந்தா மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி ராஜ் சுதாரியா கூறியதாவது, “இறந்த 4 குழந்தைகள், சிகிச்சை பெறும் 2 குழந்தைகள் உள்பட 6 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ், கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் தலைவலியை ஏற்படுத்துகிறது.
Readmore: மக்களே…! மின் கட்டண உயர்வு… 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுமா…? தமிழக அரசு முக்கிய தகவல்…!