For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மணல் விற்பனை: தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை…!

02:55 PM Apr 26, 2024 IST | Kathir
மணல் விற்பனை  தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை…
Advertisement

மணல் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டு என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் மணல்குவாரி நடவடிக்கைகள் அரசாங்கத்தால் செயல்படுகிறது. TNsand செயலி மூலமாக பொதுமக்களும் லாரி உரிமையாளர்களும் பதிவு செய்து மணலை வாங்கிக்கொள்ளலாம். மணலை 1000ரூபாய்க்கு அரசு விற்பனை செய்து வருகிறது. ஆனால் திருச்சி கனிமவளத்துறையின் கணினி பொறியாளர், செயற் பொறியாளர் உள்ளிட்டோர் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் கிடங்கில், அவர்களுக்கு தெரிந்த நபர்கள் மூலமாக பதிவு செய்து மணலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர்.

அதனை அவர்கள் சட்ட விரோதமாக பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு, 10,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக அரசுக்கு பெரும் அளவில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் மணல் விற்பனை தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்தினால், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும். ஆகவே இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்தள் நீதிபதிக சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு, மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 3ஆம் வாரத்திற்க்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Tags :
Advertisement