முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிம்ரனை சின்னவீடாக வைத்திருக்கும் சமுத்திரக்கனி..!! Black Mail செய்யும் யோகி..!! பிரசாந்துக்கு கம்பேக் நிச்சயம்..!!

Actor Prashanth's film 'Andagan' is running in theaters today. In this post, we will see the review given by famous film critic Bailwan Ranganathan for the film.
02:15 PM Aug 09, 2024 IST | Chella
Advertisement

இன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் பிரசாந்தின் படம் ’அந்தகன்’. இப்படத்திற்கு பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கொடுத்துள்ள விமர்சனத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Advertisement

அந்தகன் படத்தில் பிரசாந்த் கண் தெரியாத பியானோ கலைஞராக நடித்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியவர் அவரது தந்தை தியாகராஜன். இது, அந்தாதூண் என்று இந்தியில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம். அதன் தமிழ் ரீமேக் தான் அந்தகன். அந்தகன் என்றால் கண் தெரியாதவன் என்று அர்த்தம்.

இப்படம் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் உள்ளது. கண் தெரியாத பிரசாந்துக்கு பியானோ வாசிக்க தெரியும். அவர் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்கிறார். அவரை ஒரு குடோனில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறார்கள். துரோகிகளின் சதியில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது தான் கதை.

கண்களை மூடிக்கொண்டு கூட குருடனாக நடித்து விடலாம். ஆனால், இந்தப் படத்தில் கண்களைத் திறந்து கொண்டு பார்வையற்றவராக அற்புதமாக நடித்துள்ளார் பிரசாந்த். ஆனால், திடீரென அவருக்குக் கண் பார்வை தெரியும். அது எப்போ தெரியும்னு யாருக்கும் தெரியாது. திடீர்னு தெரியாம போகும். அதுவும் நீங்க ஏன்னு படத்தைப் பார்த்தால் தெரியும். சமுத்திரக்கனி இந்தப் படத்துல மோசமான கேரக்டர்.

போலீஸ் அதிகாரியாக இருந்தும் சிம்ரனை சின்னவீடாக வைத்திருப்பார். இது யாருக்குத் தெரியும், தெரியாது.. தெரிந்தால் என்ன நடக்கும் என்பதைத் தான் கதை விவரிக்கிறது. வில்லன்களையே பிளாக் மெயில் செய்கிறார் யோகிபாபு. சிம்ரனையும் பிளாக் மெயில் செய்கிறார். வனிதா சமுத்திரக்கனியைத் திட்டும்போது காது கொடுத்து கேட்க முடியாது. மனோபாலா 2 சீன் வந்தாலும் மனதைக் கவர்கிறார். கார்த்திக் நடிகராகவே வருகிறார்.

மருத்துவராக வரும் கே.எஸ்.ரவிகுமாரின் நடிப்பு சிறப்பு. படம் முடிந்ததும் அந்தகன் அந்தத்தை தியாகராஜன் இணைத்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை வெளியிட்டவர் தளபதி விஜய். இந்திப் படத்தில் இருந்து அந்தகன் எதில் வித்தியாசப்படுகிறது என்றால், அந்தப் படத்தில் வரும் கேரக்டர்களை இதுல என்லார்ஜ் பண்ணியிருக்கிறார் தியாகராஜன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் என்பார்கள். ராமராஜன், மோகனுக்கு இல்லாத கம்பேக் பிரசாந்துக்கு நிச்சயம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : வங்கிக் கணக்கில் மாணவர்களுக்கு ரூ.1,000..!! உயர்கல்விக்கு எதுவும் தடையாக இருக்காது..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

Tags :
அந்தகன்சமுத்திரக்கனிசிம்ரன்நடிகர் பிரசாந்த்யோகி பாபு
Advertisement
Next Article