15 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் சாம்சங்..! இந்தியர்களை பாதிக்குமா?
சாம்சங் நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் உலக அளவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். நிறுவனத்தில் உள்ள 10 சதவீதம் தொழிலாளகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தென் கொரியாவை தலைமையிடமாக கொண்ட சாம்சங் நிறுவனம் வெளி நாடுகளில் சுமார் 147,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது,
தென் கொரிய நிறுவனம் தனது உள்நாட்டு சந்தையில் பணிநீக்கங்களைத் திட்டமிடவில்லை என்று அறிக்கை கூறுகிறது. சிங்கப்பூரில் உள்ள பல்வேறு குழுக்களில் உள்ள சாம்சங் ஊழியர்களுடன் நிறுவனம் சார்பில் தனி தனி சந்திப்பு நடத்தப்பட்டது. மேலும் அவர்களிடம் பணிநீக்கங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாம்சங் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " சாம்சங்க் நிறுவனம் அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக வழக்கமான பணியாளர்களை சரிசெய்து வருகின்றன. எந்தவொரு குறிப்பிட்ட பதவிகளுக்கும் பதவி காலம் தொடர்பாக நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை" என்றார். மேலும், சாம்சங் பங்குகள் இந்த ஆண்டு 20% க்கும் அதிகமாக சரிந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சாம்சங் அதன் மொத்த ஊழியர்களான 147,000 பேரில் 10% க்கும் குறைவாகவே குறைக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் நிறுவனம் மேலாண்மை மற்றும் ஆதரவு செயல்பாடுகளை குறைக்கும் போது உற்பத்தி வேலைகளை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. சாம்சங் தனது சிப் வணிகத்தின் தலைவரை இந்த ஆண்டு திடீரென மாற்றியது மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ஜுன் யங்-ஹியூன், நிறுவனத்தின் பணியிட கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Read more ; அதிகரிக்கும் போர் பதட்டம்.. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு – மத்திய வெளியுறவு துறை