முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இணையத்தில் வைரலான DeepFake  புகைப்படம் : இன்ஸ்டா ஸ்டோரி மூலம் பதிலடி கொடுத்த சமந்தா!

03:39 PM May 07, 2024 IST | Mari Thangam
Advertisement

நடிகை சமந்தாவின் டீப்ஃபேக் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், இதற்கு சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பதிலடி கொடுத்துள்ளார்

Advertisement

தென்னிந்திய சினிமாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இது ஒரு வகையான அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது.

மையோசிடிஸ் நோய்க்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் சமந்தா, இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் இணையத்தில் பகிர தவறுவதில்லை. அப்படிதான் சமந்தா தனது சிகிச்சை தொடர்பான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். உடல்வலியைக் குறைக்கும் ’far infrared sauna’ சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், டவல் மட்டும் கட்டி இருக்கிறார் சமந்தா. இந்தப் புகைப்படத்தைப் DeepFake செய்து இணையத்தில் பரப்பி வந்தனர்.

இதுதொடர்பாக, சமந்தாவின் டீம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அந்த டீப்ஃபேக் புகைப்படத்தை பரப்பிய ஐடியை பிளாக் செய்து அந்தப் புகைப்படத்தையும் இணையத்தில் இருந்து நீக்கினர். இந்நிலையில், இதுகுறித்து சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை" என்று லீக்கான புகைப்படத்திற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.  

Tags :
DeepFake photosamantha
Advertisement
Next Article