For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காங்கிரசுக்கு மகிழ்ச்சி.! "இந்தியா கூட்டணியில் போட்டியிடுவது உறுதி" அகிலேஷ் யாதவ் பரபரப்பு அறிவிப்பு.!

03:28 PM Feb 21, 2024 IST | 1newsnationuser7
காங்கிரசுக்கு மகிழ்ச்சி    இந்தியா கூட்டணியில் போட்டியிடுவது உறுதி  அகிலேஷ் யாதவ் பரபரப்பு அறிவிப்பு
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியது. மேலும் இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தள கட்சி திடீரென வெளியேறியது.

Advertisement

அந்தக் கட்சியின் முக்கிய தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ் குமாரை கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்காததால் அவரது கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து அவர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததோடு பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து பாஜக உடன் சேர்ந்து புதிய அரசை துவக்கி இருக்கிறார்.

மேலும் மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்களது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்தனர். இதேபோன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைக்கு தொய்வு ஏற்படுவதால் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பருக் அப்துல்லா தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்திருந்தார். கூட்டணி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சி கலக்கத்தில் இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் அதிக பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி பார்ட்டி காங்கிரஸ் உடனான இந்தியா கூட்டணியில் இணைந்ததாக அறிவித்திருக்கிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் தொகுதியுடன் ஏற்படாததால் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையில் கலந்து கொள்ளப் போவதில்லை என அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார் இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இடையே சர்ச்சைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியில் போட்டியிடுவது உறுதி என அகிலேஷ் யாதவ் அறிவித்திருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசம் மாநிலத்தில் 18 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

English Summary: Akhilesh Yadav's Samajwadi party confirms that they will join the India bloc in upcoming parliamentary Elections. As per the source they will offer 18 seats for congress.

Tags :
Advertisement