உத்திரபிரதேசம்: இளம் பெண் கற்பழிப்பு, கருக்கலைப்பு வழக்கு.! சமாஜ்வாடி கட்சித் தலைவர் கைது.! மனைவி தலைமறைவு.!
உத்திர பிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு வழக்கில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது மனைவியை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜாவித் அகமத். இவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததோடு, திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கர்ப்பமான அந்த பெண்ணிற்கு தனது மனைவி உதவியுடன் கருக்கலைப்பு செய்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஜாவித் அகமது மற்றும் அவரது மனைவி சல்மா பேகம் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 366 (பெண்ணை கடத்தல், கடத்தல் அல்லது திருமணத்தை கட்டாயப்படுத்துதல்), 376 (கற்பழிப்புக்கான தண்டனை), 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல்), 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனை) மற்றும் 120பி (குற்றச் சதிக்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.