சால்மோனெல்லா மாசுபாடு…! அக்டோபர் 2023 முதல் 31% MDH மசாலா ஏற்றுமதிகளை அமெரிக்கா நிராகரிப்பு..! அறிக்கையில் வெளிவந்த உண்மை..!
இந்திய மசாலா தயாரிப்பாளர்களான எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் மசாலாக்கள், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் தடை செய்யப்பட்ட நிலையில், சால்மோனெல்லா மாசுபாட்டின் காரணமாக அமெரிக்காவிற்கு எம்.டி.ஹெச் பிரைவேட் லிமிடெட் ஏற்றுமதி செய்த மசாலா தொடர்பான ஏற்றுமதிகளுக்கான மறுப்பு விகிதங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்க சுங்க அதிகாரிகள் 31% MDH இன் மசாலா ஏற்றுமதிகளை நிராகரித்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய இரண்டும் MDH மற்றும் எவரெஸ்ட் மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு எனப்படும் பூச்சிக்கொல்லியைக் கண்டறிவதாகக் கூறப்பட்டதைத் அடுத்து தடை செய்தது, இந்நிலையில் அதே மசாலாக்களில் சால்மோனெல்லா மாசுபாட்டின் விகிதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க சுங்க அதிகாரிகள் 31% மசாலா ஏற்றுமதிகளை நிராகரித்துள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் தயாரிப்புகள் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து FDA செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "FDA இது குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறது." என்று கூறினார்.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரின் தடையை அடுத்து, எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் மசாலா பிராண்டுகளும், தரமான தரத்திற்கான இந்திய ரெகுலேட்டரின் ஸ்கேனரின் கீழ் உள்ளன.
இந்தியாவில் உள்ள தொழில்துறை கட்டுப்பாட்டாளரான மசாலா வாரியம், மசாலா தயாரிப்பாளர்களான எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் சில தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகளின் அறிக்கைகள் வெளிவந்த பிறகு, தரமான தரங்களுக்கு இணங்குவதற்கான வசதிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
மேலும் இது குறித்து ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், ஏற்றுமதி குறித்த தரவைக் கோரியுள்ளதாகவும், பிரச்சினையின் "மூலக் காரணத்தை" கண்டறிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், வாரியம் கூறியது.