முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

32,500 ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு...! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குட் நியூஸ்...!

Salary waiver for 32,500 teachers
01:32 PM Oct 09, 2024 IST | Vignesh
Advertisement

32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து, கல்வி வளர்ச்சிக்காக, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதற்காக, நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, 15,000 பேரும், ஒப்பந்த அடிப்படையில் பகுதி 17,500 பேரும் என மொத்தம், 32,500 பேர் பணியாற்றுகின்றனர்.‌இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் வரை வழங்கப்படவில்லை.

இந்தாண்டு, இந்த திட்டத்திற்காக, 3,585 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய அரசு, 1,434 கோடி ரூபாயையும், மாநில அரசு 2,151 கோடி ரூபாயையும் வழங்க வேண்டும். இதில், மத்திய அரசு முதல் காலாண்டு நிதியாக, 573 கோடி ரூபாயை வழங்க வேண்டும். ஆனால், இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. மொத்தம், 822 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த நிலையில் 32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மொழி; 32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு. மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
anbil magheshcentral govtstaffteacherstn government
Advertisement
Next Article