முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Salary | இனி வாழ்நாள் ஊதியம்..!! 2025இல் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்..!! பணம் கொட்டப்போகுது..!!

05:56 PM Mar 25, 2024 IST | Chella
Advertisement

இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை, வாழ்நாள் ஊதியமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ.,வை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஐ.எல்.ஓ., ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, தற்போது தொழிலாளர்கள் வாங்கி வரும் குறைந்தபட்ச ஊதியம் என்பதற்கு மாற்றாக வாழ்நாள் ஊதியம் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ.176 உள்ளது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால், இது பன்மடங்கு அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊதியங்கள் குறித்த குறியீடு நடைமுறைப்படுத்தப்படாமல், நிலுவையில் உள்ள நிலையில், இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய ஊதிய திட்டமாக இருக்க வேண்டும் என ஐ.எல்.ஓ., இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் இதனை அமல்படுத்தி, 2030ஆம் ஆண்டிற்குள் நிலையான வளர்ச்சியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுடன், 90% பேர் அமைப்பு சாரா துறையில் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த குறைந்தபட்ச ஊதிய அளவு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் வறுமை நிலை மாறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Crime | அக்காவை பார்க்க ஓடோடி வந்த தங்கையை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த மாமா..!! ஆசைக்கு இணங்க மறுத்ததால் அடித்து துரத்திய கொடூரம்..!!

Advertisement
Next Article