For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Salary Hike | சம்பள உயர்வு + நிலுவைத்தொகை..!! மார்ச் 30ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு வெளியாகும் குட் நியூஸ்..!!

07:16 AM Mar 27, 2024 IST | Chella
salary hike   சம்பள உயர்வு   நிலுவைத்தொகை     மார்ச் 30ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு வெளியாகும் குட் நியூஸ்
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி சம்பள உயர்வு, நிலுவைத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு இருப்பதாக மகா சிவராத்திரி அன்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் அந்த மாதத்திற்கான உயர்த்தப்பட்ட சம்பளத்தை மார்ச் 30ஆம் தேதியன்று பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், நிதியாண்டின் கடைசி நாள் என்பதால், மார்ச் 31ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், வங்கிகளை வேலை செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, எப்போது கிடைக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம். தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (CPI-IW) ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது. தற்போது 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பதால் 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Aavin Milk | தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு..? ஆவின் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Advertisement