மாதம் ரூ.15,000-க்கும் மேல் சம்பளமா..? 4 சக்கர வாகனம் இருக்கா..? உங்களுக்கு இலவச வீடு கிடையாது..!! வெளியான புதிய நிபந்தனை..!!
”பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்” பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பலன் பெறுவார்கள். இதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் இருந்தால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கிடையே, இந்த ஆண்டோடு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால், அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
புதிய நிபந்தனைகள் என்னென்ன..?
* ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கடன் பெற தகுதியுள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருப்போர், அரசு ஊழியர் குடும்பத்தினர் பயன்பெற முடியாது.
* 3 சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் கருவிகள் வைத்திருப்போர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.
* வேளாண் சாராத தொழில் நிறுவனங்கள் நடத்துவோர், மாதந்தோறும் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்களும் பயன்பெற முடியாது.
* வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களும் பயன்பெற தகுதியற்றவர்கள்.
* செங்கல் சுவர்கள், கூரை மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டில் குடியிருப்போரு வீடு பெற முடியாது.
* பாசன வசதியுள்ள 2.5 ஏக்கர், பாசன வசதியில்லாத 5 ஏக்கர் நிலம் கொண்டவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
Read More : மனைவியை காருக்குள் வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர கணவன்..!! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!