முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டும்.. டும்..டும்.. நண்பனையே காதலித்து கரம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்..!! - குவியும் வாழ்த்துகள்

Sakshi, who rose to fame from the show Bigg Boss, is married to her childhood friend and lover Navneet Mishra.
06:55 PM Jan 03, 2025 IST | Mari Thangam
Advertisement

இளம் வயதிலேயே மாடலிங் துறையில் பயணிக்க தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால், "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் தான் தனது கலையுலக பயணத்தை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா", தல அஜித்தின் "விசுவாசம்" போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த சாக்ஷி அகர்வால், தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

Advertisement

குறிப்பாக தமிழில் "அதர்மக் கதைகள்", "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" உள்ளிட்ட படங்களில் அவர் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அண்மையில், தான் நடித்த ஒரு மலையாள மொழி திரைப்படத்திற்காக சிறப்பாக "களரி" பயிற்சிகளை அவர் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்‌ஷி தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ரா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த சாக்‌ஷி அகர்வால், சிறுவயது நண்பர் தற்போது இணையராக மாறிவிட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அவரை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இவரது திருமணம் கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் சாக்‌ஷி அகர்வாலுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Read more ; நடிகை தமன்னாவின் காதலன் விஜய் வர்மா அரிய வகை நோயால் பாதிப்பு.. ரசிகர்கள் ஷாக்..!!

Tags :
Actress Sakshi Agarwalbigg boss
Advertisement
Next Article