For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு...!

08:01 AM Dec 21, 2023 IST | 1newsnationuser2
2023 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு
Advertisement

தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் (தேவிபாரதி)-க்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. ஒன்பது கவிதை புத்தகங்கள், ஆறு புதினங்கள், ஐந்து சிறுகதைகள், மூன்று கட்டுரைகள், ஒரு இலக்கிய ஆராய்ச்சி என மொத்தம் 24 மொழிகளில் படைக்கப்பட்ட படைப்புகளை எழுதியோருக்கு இவ்விருதுகள் அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் மூன்று உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் (தேவிபாரதி)-க்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு செப்பு பட்டயம், சால்வையுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. புதுதில்லியில் 2024-ம் ஆண்டு மார்ச் 12 அன்று கோபர் நிக்கர்ஸ் மார்க்கில் உள்ள காமனி அரங்கில் நடைபெறவுள்ள விழாவில் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படவுள்ளது.

Advertisement