For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஐரோப்பாவை மூடிய சகாரா தூசி! காரணம் என்ன?

11:05 AM Apr 12, 2024 IST | Mari Thangam
ஐரோப்பாவை மூடிய சகாரா தூசி  காரணம் என்ன
Advertisement

சஹாரா பாலைவனத்திலிருந்து உருவான மாபெரும் தூசி மேகம் ஐரோப்பாவின் மீது படிந்து பனிமூட்டமான வானத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சஹாரா  பாலைவனத்தில் உருவாகியுள்ள மாபெரும் தூசி மேகம் ஐரோப்பிய பிராந்தியங்களை தாக்கியுள்ளது. இதனால் கார்கள் மற்றும் கண்ணாடிகளில் தூசி படிந்து இருப்பதுடன், பனி மூட்டமான சூழல் நிழவுகிறது.

இதுகுறித்து, கூறிய ஐரோப்பிய வளிமண்டல கண்காணிப்பு சேவை, "கால நிலை மாற்றத்தால் இது நிகழ்ந்துள்ளது. சமீபத்திய வாரங்களில் நடந்த மூன்றாவது நிகழ்வாகும். தூசி மேகம் ஸ்பெயின் முழுவதும் பயணித்து, தென் கிழக்கு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரித்தானியாவின் தென் கிழக்கு முனை வரை சென்றடைந்தது. இதனால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய தூசி மேகம் படிப்படியாக சிதறி, இன்னும் சில நாட்களில் வடக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை சென்றடையும். உடனடி தாக்கங்கள் தற்காலிகமானவை என்றாலும், இந்த தூசி புயல்களின் அதிகரித்து வரும் அதிர்வெண் மற்றும் தீவிரம் நீண்ட கால பொது சுகாதாரம் மற்றும் சாத்தியமான சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் குறித்து கவலைகளை எழுப்புகின்றன” என தெரிவித்தது.

Tags :
Advertisement