உங்க வீட்டில் எலிகள் தொல்லை அதிகம் இருக்கா? அப்போ பாதுகாப்பான தீர்வு இது தான்..
பல்வேறு காரணங்களால் வீட்டிற்குள் நுழையும் எலிகள் வீட்டில் உள்ள துணிமணிகளை சேதப்படுத்துவதுடன் உணவு பொருட்களிலும் அசுத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு பல்வேறு உடல்நல குறைபாடுகள் உண்டாகின்றன. கிராமப்புறங்களில் மட்டும் அல்லாது நகரங்களிலும் சாக்கடை ஓரம் இருக்கும் வீடுகளில் எலிகள் அட்டகாசம் செய்கிறது. இதனை தடுக்க வீட்டிலேயே ஒரு சிறந்த தீர்வு இருக்கிறது.
அது தான் கிராம்பு. பொதுவாக கிராம்பு அதிக நெடி கொண்டது. இதன் வாசனையை எலிகளால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் கிராம்பு ஒரு சிறந்த எலி விரட்டியாக பயன்படுகிறது. என்னதான் எலிப்பொறி பயன்படுத்திலானாலும் எலிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதே சிறந்த வழி. இதற்கு வீட்டில் இருக்கும் கிராம்பு பயனுள்ளதாக அமைகிறது. கிராம்பு எண்ணெய், அல்லது நுணுக்கிய கிராம்பை வீட்டின் அலமாரி, டிராயர் போன்ற இடங்களில் தெளிக்க வேண்டும். குறிப்பாக எலிகள் நுழையும் கதவு,சன்னல்களின் ஓரத்தில் தெளிக்க வேண்டும். இதனை முகர்வதால் எலிகள் வீட்டில் நுழையாது.
கிராம்பு எண்ணெய் மற்றும் சிறிது நீர் சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் தயாரித்து வீட்டின் அனைத்து மூலைகளிலும் அடிக்கலாம். கிராம்பு எண்ணெய் இல்லாத பட்சத்தில் சிறிதளவு கிராம்பு எடுத்து அதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் பாதியாக வற்றிய பின் அதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எலிகள் நுழையும் இடங்களில் ஸ்ப்ரே அடிக்கலாம். இதனால் எலிகள் உள்நுழைவது தடுக்கப்படும். அல்லது சிறிதளவு கிராம்பை ஒரு பருத்தி துணியில் கட்டி எலிகள் உள்நுழையும் இடங்களில் வைத்தாலும் எலிகள் வராமல் தடுக்கலாம்.
Read more: காய்கறிகளை, இப்படி சமைத்தால் தான் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.. டாக்டர் சிவராமன் அட்வைஸ்…