For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொது இடங்களில் ஆடு மாடுகளை பலியிட தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை..!

06:02 AM Jun 14, 2024 IST | Kathir
பொது இடங்களில் ஆடு மாடுகளை பலியிட தடையில்லை   உயர்நீதிமன்ற மதுரை கிளை
Advertisement

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் கடந்த ஆண்டு உயர்நீத்திமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட்டு வருகின்றனர். மாநகராட்சி அனுமதிக்கப்படாத இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆடு, மாடுகள் வதை சட்டத்தின்படி மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் ஆடு, மாடுகளை பலியிட வேண்டும். ஆனால் வீடுகளிலும், இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களிலும் ஆங்காங்கே ஆடு, மாடுகளை வெட்டி பலியிடுகின்றனர். இதற்கு தடை வித்திக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை கடந்த ஆண்டு விசாரித்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்காமல் வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று(ஜூன் 13ஆம் தேதி) நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பக்ரீத் பண்டிகை 700 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இது போன்ற வழிபாடு நம்பிக்கையுடையவைகளில் எவ்வித தலையீடும் இருக்க கூடாது என்பது தெளிவாக உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ,17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள சூழலில் ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்த உத்தரவையும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்

Tags :
Advertisement