BIGG BOSS 8 | ரீ-என்ட்ரீ கொடுத்த சாச்சனா.. அசந்து போன போட்டியாளர்கள்..!! நெட்டிசன்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கு?
பிக்பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் போட்டியில், முதல் நாள் அன்று 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து விஜய் சேதுபது வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அறிமுக நிகழ்ச்சியின் நிறைவில், 24 மணிநேரத்தில் முதல் போட்டியாளர் எவிக்சன் முறையில் வெளியேற்றப்படுவார் என்று விஜய் சேதுபதி அறிவித்தது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா 2வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிலையில், 24 மணி நேரத்தில் முதல் ஆளாக அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இந்நிலையில், மகாராஜா படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் கலந்துக் கொள்ளவே சாச்சனாவை 24 மணி நேரத்தில் எலிமினேட் செய்தோம். தற்போது அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருக்கும் என புதிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
அந்த புரோமோவில், குறுக்கு வழியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார் சாச்சனா, அங்கிருந்த பெட்டில் உட்கார்ந்திருப்பதை வி.ஜே.விஷால், அதிர்ச்சியுற்று "ஏய்" என்று அனைவரையும் கத்தி அழைக்கிறார். உடனே போட்டியாளர்கள் சாச்சனாவை பார்த்ததுமே ஆச்சரியத்துடன் ஓடிவந்து, சாச்சானைவை கட்டியணைத்து பேசுகிறார்கள்.. அப்போது சாச்சனா, "நான் வெளியிலிருந்து எல்லாத்தையும்தான் பார்த்துட்டுதான் இருந்தேன்" என்று சொல்லி வீட்டிலுள்ள எல்லாரிடமும் பேசுகிறார்.. அதேபோல, விஜே விஷால் நேற்றைய தினம் போலவே, "ரஞ்சித் சார் லீஸ்ட் கண்டெண்ட் கொடுக்கிறார்" என்று சொல்லவும், இன்றைய ப்ரமோ முடிவடைகிறது..
ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் திட்டமிட்டு சதி செய்து சாச்சனாவை வெளியே அனுப்ப அவர் கதறி அழுது, கோப்பையை போட்டு உடைத்து வெளியேறினார். இந்நிலையில், மீண்டும் அவரை ஒரே வாரத்துக்குள் வைல்டு கார்டாக உள்ளே அனுப்பி இஷ்டத்துக்கு பிக் பாஸ் விளையாட்டை விளையாடுகின்றனர் என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். சாச்சனா உள்ளே வந்ததும் லீஸ்ட் பர்ஃபார்மன்ஸ் போட்டியாளர் என ரஞ்சித்தை ஏன் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவரை வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளார்களா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
Read more ; பிக்பாஸ் வீட்டுக்குள் கள்ளக்காதல் ஜோடி..? நீயெல்லாம் இதை பேசலாமா..? காரி துப்பும் முன்னாள் மனைவி..?