சபரிமலை ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல விலக்கு...! மத்திய அரசு அறிவிப்பு
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி தேங்காய்களை எடுத்துச் செல்வதற்கு சிறப்பு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
2025 ஜனவரி 20ம் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது கொண்டு செல்லும் இருமுடியை விமானத்தின் கேபினுக்குள் கொண்டு செல்ல சிறப்பு விலக்கு வழங்கி உள்ளதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு இருமுடி விமானத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த விதிவிலக்குக்கு முன், கேபின் பேக்கேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியலில் தேங்காய் இருந்தது. சிறிய துண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றும் உலர்ந்த தேங்காய், கொப்பரை அனுமதிக்கப்படாது. இப்போது ஜனவரி 20, 2025 வரை, சபரிமலை யாத்ரீகர்கள் இருமுடியில் அதையே எடுத்துச் செல்லலாம். கிர்பான் என்பது மத அடிப்படையில் அனுமதிக்கப்படும் மற்றொன்று. உள்நாட்டு விமானங்களில், 9-இன்ச் வரை அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.