"நீங்க காட்டின மதத்துல அப்படி மூடநம்பிக்கை இல்ல.." தளபதி விஜய் பட இயக்குனர் குறித்து எஸ்.ஏ சந்திரசேகர் சர்ச்சை கருத்து.!
இயக்குனர் எழில் துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர். பல மொழிகளில் படங்களை இயக்கி, தமிழக அரசின் மாநில விருதுகளை பெற்றவர். தற்போது தேசிங்கு ராஜா 2 படத்தை, நடிகர் விமலை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றும் எழில்25 விழாவிற்கு, நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் புகழ்பெற்ற இயக்குனருமான திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை அழைத்திருந்தார். எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் மேடை ஏறி பேசியபோது இதுவரை தான் சந்தித்த பல இயக்குனர்களையும் பாராட்டி பேசினார்.
அப்போது சமீபத்தில் தான் ஒரு படம் பார்த்ததாகவும், அதன் இயக்குனருக்கு போன் செய்து முதல் பாதி சிறப்பாக அமைந்திருப்பதாக பாராட்டியதாகவும் கூறினார். இரண்டாம் பாதி சரி இல்லை என்று கூறிய போது, அவர் தான் உணவருந்தி கொண்டிருப்பதாக கூறினார் என்றும் தெரிவித்தார். நீங்கள் காட்டிய மதங்களில் அந்த நம்பிக்கை எல்லாம் கிடையாது. ஒரு தகப்பனே பிள்ளையை கொல்ல மாட்டார் என்றெல்லாம் கூறிய போது, அந்த இயக்குனர் செவி மடுக்கவில்லை என்றும் கூறி அந்த சம்பவத்தை விவரித்தார்.
படம் வெளிவந்த பின்பு அவர் கூறிய அத்தனை விமர்சனங்களையும் மக்களும் முன் வைத்தனர் என்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த, லியோ படத்தை பற்றி பேசியது சர்ச்சையை கிளப்பியது. சிலர் அவரது பேச்சு எதார்த்தமாகவும், உண்மையாகவும் இருப்பதாக பாராட்டினாலும், தனது மகனின் படத்தை இப்படி மேடையில் விட்டுக் கொடுக்கலாமா? என்றும் இரு வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.