முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரஷ்யாவின் கோரமுகம்!. முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்!. தீவிரமடைந்த உக்ரைன் போர்!.

Russia fired new ballistic missile at Ukraine, Putin says
06:01 AM Nov 22, 2024 IST | Kokila
Advertisement

Ballistic Missile Attack: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு பதிலடியாக ரஷ்யா, நேற்று உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

Advertisement

நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. போர் தொடங்கி கடந்த புதன் கிழமையுடன் 1,000 நாட்கள் நிறைவடைந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் உட்பகுதிகள் மீது, தாங்கள் வழங்கிய தொலைதூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த அமரிக்க அதிபர் பைடனும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கினர்.

இந்த அனுமதி கிடைத்த சில மணி நேரத்தில் ரஷ்யா மீது அமெரிக்க தயாரிப்பு ஏடிஏசிஎம்எஸ் மற்றும் இங்கிலாந்து தயாரிப்பு ‘ஸ்டாம் ஷேடோ’ ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் ஏவியது. ஸ்டாம் ஷேடோ ஏவுகணைகளை, நடு வானில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியது. இது உண்மையாக இருந்தால் போரில் முதல் முறையாக கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை பயன்படுத்தும் நாடாக ரஷ்யா இருக்கிறது.

இது பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் சென்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. இந்த தாக்குதலின் போது ஆறு Kh-101 க்ரூஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் ராணுவம் கூறுகிறது. இந்த ஏவுகணை எந்த இலக்கைக் குறிவைத்து தாக்கியது. அதனால் எந்தவகையான சேதங்கள் ஏற்பட்டவை என்பதை உக்ரைன் இராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை.

அமெரிக்கா உக்ரைனுக்கு ATACMS போன்ற நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய சில நாட்களுக்குப் பின்னர் ரஷ்ய இராணுவத் தளங்களை குறிவைக்க உக்ரைன் இந்த வார தொடக்கத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை நடதியதாகக் கூறப்படுகிறது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சாத்தியமான ICBM தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அது பற்றிய கேள்விகள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்யப் படைகள் இரண்டு பிரிட்டிஷ் தயாரிக்கப்பட்ட Storm Shadow குரூஸ் ஏவுகணைகளை இடைமறித்ததாகக் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. ஆனால் அந்த ஏவுகணைகள் உக்ரேனிய அல்லது ரஷ்ய பிரதேசத்தின் மீது சுடப்பட்டதா என்பதைக் குறிப்பிடவில்லை. ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் இரண்டு பிரிட்டிஷ் தயாரிப்பான Storm Shadow cruise missiles, 6 US தயாரிப்பான HIMARS ரியாக்டிவ் ஏவுகணைகள் மற்றும் 67 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது என்று ரஷ்ய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Readmore: 2025-ல் இந்த ராசியினர் பணக்காரர்களாக மாறுவர்!. பாபா வங்கா கணிப்பு!.

Tags :
Ballistic Missile AttackRussiaukraineWAR
Advertisement
Next Article