For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"திகில் சம்பவம்.." மம்மியாக்கப்பட்ட கணவன் உடல்.. உடலுடன் 4 வருடங்கள் வாழ்ந்த மனைவி.! அமானுஷ்ய சடங்குகளால் பரபரப்பு.!

06:32 PM Feb 07, 2024 IST | 1newsnationuser4
 திகில் சம்பவம்    மம்மியாக்கப்பட்ட கணவன் உடல்   உடலுடன் 4 வருடங்கள் வாழ்ந்த மனைவி   அமானுஷ்ய சடங்குகளால் பரபரப்பு
Advertisement

ரஷ்யாவில் பெண்ணொருவர், இறந்த தனது கணவனின் உடலை மம்மியாக்கி, அதனுடன் 4 வருடங்கள் உறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல அமானுஷ்ய சடங்குகளை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரஷ்யாவில் ஸ்வெட்லானா(50) என்ற பெண்ணின் கணவர் விளாடிமிர்(49) மர்மமான முறையில் தனது பெரிய வீட்டில் இறந்தார். டிசம்பர் 2020இல் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டால் சண்டை வந்தது. அப்பொழுது அவர் மனைவி விளாடிமிரைப் பார்த்து கத்தி, பின்பு அவருக்கு மரணம் நிகழட்டும் என்று சபித்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே அவரது கணவர் கீழே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

இறந்த அவரது கணவரின் உடலை போர்வையால் சுற்றி தனது அறைக்கு எடுத்து சென்று இருக்கிறார். இதைப் பற்றி யாரிடமும் கூறினால், அனாதை விடுதியில் சேர்த்து விடுவதாகவும் தனது 4 குழந்தைகளை அச்சுறுத்தியுள்ளார். விளாடிமிரின் கால்களில் பிரச்சனை இருந்ததால், அவரைப் பற்றி கேட்ட பக்கத்து வீட்டினரிடம், அவர் மாற்று அறுவை சிகிச்சைக்காக திபெத் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு சமூக சேவகர், அந்த வீட்டின் குழந்தைகளைத் தேடிய போது, இறந்த அந்தக் கணவரது மம்மியாக்கப்பட்ட சடலம் கிடைத்தது. காவல்துறையினர் அவர்களின் வீட்டை சோதனையிட்டபோது, டாரட் கார்டுகள், மிருகங்களின் மண்டை ஓட்டை கொண்ட புகைப்படங்கள், தாயத்துகள், எகிப்திய சிலுவை போன்ற பல அமானுஷ்ய பொருட்கள் கிடைத்தன.

படுக்கை அறையில் குள்ளநரியின் தலையுடைய பண்டைய எகிப்திய கடவுளான அனுபிஸுக்கு தற்காலிக சன்னதி அமைத்து வழிபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. விளாடிமிர் விரும்பக்கூடும் என்று, பல சடங்குகளை செய்ததாகவும் அவரது மனைவி தெரிவித்தார்.

அந்தப் பெண் தற்போது மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது குழந்தைகளும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவ சோதனைகளின் முடிவுகள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்த பின்பு தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்தது.

Tags :
Advertisement