ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவை மதிக்கவில்லை!. மோடி உடனான சந்திப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் கருத்து!.
Zelenskyy: பிரதமர் நரேந்திர மோடி கியேவில் இருந்து திரும்பிய நிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்த சில கருத்துகள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
உக்ரைன் அதிபர் Zelenskyy உடனான சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லிக்குப் புறப்பட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அதிபர், "பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் ஒருபோதும் மதித்ததே இல்லை. அதனால் தான் அவரை சந்திக்க மாஸ்கோ சென்றிருந்த போது ரஷ்யா, உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது" என பேட்டியளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்,ரஷ்யாவின் இராணுவ முயற்சிகளுக்கு ஆதரவாக பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்மையாக விவாதித்தோம். உக்ரைனின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இந்தியா ஆதரிக்கிறது. இந்த ஆதரவு முக்கியமானது, ஏனெனில் இது ஐ.நா. சாசனத்தை மதிக்கும் உலகளாவிய கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மாதம் ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாமிடிர் புதினை சந்தித்துப் பேசினார். புதினை கட்டியணைத்து பிரதமர் மோடி பேசியதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அப்போது விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு!. தாஜ்மஹாலின் நுழைவுக் கட்டணம் உயர்வு!. எவ்வளவு தெரியுமா?