உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்!! - 36 பேர் பலி
உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் 5 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ரஷ்யா சரமாரியாக நடத்திய தாக்குதலில் குழந்தைகள் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்தது.
உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இதுவரை 36 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் 7 சிறுவா்கள் உள்பட 16 போ் காயமடைந்தனர். மருத்துவமனை வளாகத்தில் ரஷ்யாவின் கேஹெச்-101 ரக ஏவுகணையின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ரஷியாவுக்கு எதிராக போா்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினா்.
கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு இது மிக பெரிய தாக்குதல் ஆகும். இந்தத் தாக்குதலில், கின்ஜால் என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ரஷ்யாவிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும் என உக்ரைன் நாட்டின் விமான படை தெரிவித்துள்ளது. இந்த கின்ஜால் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்ல கூடிய திறன் வாய்ந்தவை.
அதனால் இந்த வகை ஏவுகணைகளை தடுத்து மறிப்பது என்பது கடினம். இந்த தாக்குதல்களால், நகரத்தில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. இந்தத் தாக்குதல்கள் பற்றி பேசியுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, "வெவ்வேறு வகையான 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், உக்ரைனின் ஐந்து நகரங்கள் முக்கிய இலக்காக கொள்ளப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.