ரஷ்யா-உக்ரைன் போர்!. அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயார்!. பிரதமர் மோடி பேச்சு!
PM Modi: 16வது பிரிக்ஸ் மாநாட்டையொட்டி கசானில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி , "உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கசான் போன்ற அழகான நகரத்திற்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரிக்ஸ் உச்சிமாநாடு இந்த நகரத்துடன் இந்தியா ஆழமான மற்றும் வரலாற்று உறவுகளைக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம், மேலும் கசானில் புதிய இந்திய தூதரகம் திறப்பதன் மூலம் இந்த உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று கூறினார்.
மேலும்,"ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவி வரும் மோதல்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நான் முன்பு கூறியது போல், பிரச்சனைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அமைதிக்கு நாங்கள் உறுதியாக உள்ளோம், நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். கூடிய விரைவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு, வரும் காலங்களில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்.
Readmore: 20 ஆண்டுகளுக்கு பின் அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம்!. NPS-ன் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!