ஹனிமூன் செலவு.. குழந்தை பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.26,000..!! ரஷ்யா போட்ட பிளான்.. இதுதான் செக்ஸ் அமைச்சகமா?
ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க உள்ளது. அதாவது,மூன்று ஆண்டுகளாக உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யா, மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்துள்ளதுடன், அந்நாட்டின் மக்கள் தொகையும் வேகமாக குறைந்து வருகிறது. இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடான ரஷ்யாவில் வெறும் 14 கோடி தான் மக்கள்தொகை. இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக பாலியல் அமைச்சகத்தை (Sex Ministry) கொண்டு வர ரஷ்ய அரசு பரிசீலினை செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது என்ன செக்ஸ் அமைச்சகம்? அந்நாட்டில் உடனடியாக மக்கள் தொகையை அதிகரிக்க, ரஷ்ய நாடாளுமன்றக் குழுவின் தலைவியான நினா ஒஸ்தானினா தலைமையில் இந்த அமைச்சகம் அமைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அமைச்சகம் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும். உதாரணமாக இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை நாடு முழுவதும் இன்டெர்நெட் கனெக்ஷனை முடக்க இந்த அமைச்சகம் முன்மொழியும். இதன் மூலம் ஆண்-பெண் இடையே உரையாடல் அதிகரிக்கும், இது இருவரின் உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதேபோல வீட்டிலேயே முடங்கி இருக்கும் பெண்களுக்கு, ஊதியம் வழங்கவும் திட்டமிடப்பட்டிக்கிறது.
அதாவது திருமணமான பெண் வீட்டில் இருக்கிறார் எனில், அவர் குடும்பத்தை பேணி பராமரிக்கிறார் என்று அர்த்தம். அதுவும் ஒரு உழைப்புதான். குடும்ப தலைவியின் உழைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்வதில்லை. எனவே அவர் செய்யும் பணிக்காக மாதம் ரூ.5000 வரை வழங்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு மாதம் ரூ.26,000 வரை வழங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தவிர, புதியதாக திருமணமானவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பம் இருந்தால் அவர்களுக்கான ஹனிமூனை ரஷ்ய அரசே செய்து கொடுக்கும்.
குறிப்பாக அவர்கள் தங்கும் ஹோட்டலின் செலவை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளவும் இந்த அமைச்சகம் பரிதுரைகளை வைக்க இருக்கிறது. இவ்வாறு குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை நிவர்த்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை ரஷ்யா பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.