For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மோடி - புதின் சந்திப்பு | ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற முடிவு..!!

Russia to discharge all Indians recruited in Russian Army after PM Modi raises matter with Putin
09:42 AM Jul 09, 2024 IST | Mari Thangam
மோடி   புதின் சந்திப்பு   ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற முடிவு
Advertisement

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இதுவரை இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளனர். போர் மண்டலத்தில் சிக்கிய இந்தியர்கள் தாங்கள் ரஷ்யா ராணுவத்தில் ஏமாற்றி சேர்க்கப்பட்டதாக தெரிவித்தன. இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை விடுவிக்க ரஷ்ய அதிபர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

Advertisement

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இரு ஆண்டுகளை கடந்தும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா – ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, டில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார்.

ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. கடைசியாக, 2019ல் ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். மேலும், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது. மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷ்ய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். இந்த காரில், அவருடன், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் உடன் சென்றார். ஹோட்டலுக்கு வெளியே திரண்ட ஏராளமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்தார்.

அப்போது, பிரதமர் மோடிக்கு புடின் பாராட்டு தெரிவித்தார், அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார், மேலும் மோடியின் நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நிர்வாகமே இதற்குக் காரணம் என்று கூறினார். மோடியின் ஆற்றல் மிக்க தலைமை, புதுமையான யோசனைகள் மற்றும் இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் நன்மை பயக்கும் முடிவுகளை வழங்கும் திறனை புடின் எடுத்துரைத்தார். இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், எரிசக்தி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். முன்னதாக, உக்ரைனின் இறையாண்மை குறித்து புதினிடம் மோடி வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து ரஷிய ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை பணியில் இருந்து சீக்கிரம் விடுவிக்க வேண்டும் மோடி புதினிடம் வலியுறுத்தியுள்ளார்.

அந்த பேச்சுவார்த்தையில், தங்கள் ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றவும், அவர்கள் திரும்புவதற்கு வசதி செய்யவும் ரஷ்யா ஒப்புக்கொண்டது. இரண்டு நாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று மாலை அதிபர் விளாடிமிர் புடின் நடத்திய தனிப்பட்ட விருந்தில் இந்த விவகாரத்தை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement