முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என்னது கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா??

rumours-about-keerthy-suresh-marriage-is-spread
07:24 PM Nov 17, 2024 IST | Saranya
Advertisement

தமிழ் திரை உலகில் பல ரசிகர்களை கொண்ட நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பை சிலர் கேலி செய்தாலும், இவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்களும் பலர் உள்ளனர். முன்னாள் நடிகை மேனகா சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்றவர் தான் கீர்த்தி சுரேஷ்.

Advertisement

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதையை வைத்து எழுதப்பட்ட மகாநதி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. இப்படி இவரது பெருமைகளை பற்றி பேசிக்கொண்டே போகலாம். பொதுவாக, எந்த நடிகை சிங்கிளாக இருந்தாலும், அவ்வப்போது அவர்களின் காதல் அல்லது திருமணம் குறித்து வதந்திகள் பரவுவது வழக்கம். அந்த வகையில், 32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷும், அனிருத்தும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. 

ஜவான் படம் வெளியான சமயத்தில், இவர்கள் இருவரும் இருக்கும் போட்டோக்களை வைத்து வட இந்திய ஊடகங்கள், இருவரும் காதலிப்பதாக எழுதின. ஆனால், இது குறித்து கீர்த்தி-அனிருத் இருவருமே எந்த பதிவையும் வெளியிடவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, கீர்த்திக்கும் அனிருத்திற்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் வதந்தியா, அல்லது உண்மை தகவலா என்பதை இனிவரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

Read more: நீச்சல் குளத்தில் கிடந்த 3 பெண்களின் சடலம்.. போலீசார் விடுத்த எச்சரிக்கை!!

Tags :
Anirudhkeerthy sureshlovemarriage
Advertisement
Next Article