For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'தீ பரவியதாக வந்த குரல்..'ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணிகள்!! பரிதாபமாக உயிரிழந்த 3 பேர்!!

Amid rumors of a train catching fire in Jharkhand, three people who jumped from a moving train to save their lives died tragically.
12:40 PM Jun 16, 2024 IST | Mari Thangam
 தீ பரவியதாக வந்த குரல்   ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணிகள்   பரிதாபமாக உயிரிழந்த 3 பேர்
Advertisement

ஜார்க்கண்டில் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில், உயிரை காப்பாற்றுவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பீகார் மாநிலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீ பரவியதாக வதந்தி பரவிய நிலையில், பலர் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக ஓடும் இரயிலில் இருந்து குதித்தனர். அவ்வாறு கீழே குதித்தவர்களில் மூன்று பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரயிலில் தீ பற்றாத நிலையில் தவறான தகவலை பரப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் நக்சல் அமைப்புகளின் செயல்பாடு தீவிரமாக இருப்பதால், சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது யாரேனும் விளையாட்டுக்கு இப்படி செய்தார்களா என்றக் கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Read more ; ‘பாலியல் உறவுக்கு மறுத்த மூதாட்டி..’ பேனாவால் குத்தி கொலை செய்த போலீஸ் அதிகாரியின் மகன்!! நடந்தது என்ன?

Tags :
Advertisement