For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திடீரென அக்கவுண்டில் விழுந்த ரூ.9,900 கோடி!… அதிர்ச்சியடைந்த நபர்!… விளக்கமளித்த அதிகாரிகள்!

07:21 AM May 19, 2024 IST | Kokila
திடீரென அக்கவுண்டில் விழுந்த ரூ 9 900 கோடி … அதிர்ச்சியடைந்த நபர் … விளக்கமளித்த அதிகாரிகள்
Advertisement

UP: உத்தரபிரதேசத்தில் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் திடீரென விழுந்த ரூ.9,900 கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ள செய்தி சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தை சேர்ந்தவர் பானு பிரகாஷ். இவர் பரோடா உபி வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்தநிலையில், வழக்கம்போல், வங்கி கணக்கில் பேலன்ஸை செக் செய்துள்ளார். அப்போது ரூ.99 கோடியே 99 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 999 அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து வங்கிக்கு தெரிவித்துள்ளார்.

விசாரணையில், பானு பிரகாஷின் கணக்கு கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன் கணக்கு என்றும், அது துரதிர்ஷ்டவசமாக செயல்படாத சொத்தாக (என்பிஏ) மாறிவிட்டது என்றும் வங்கி தெளிவுபடுத்தியது. மேலும் இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் ரோஹித் கெளதம் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் தவறுதலாக நிகழ்ந்ததாக விளக்கமளித்துள்ளார். மேலும், தொழில்நுட்ப கோளாறில் ஏற்பட்ட தவறை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, இதையடுத்து இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்க கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

Readmore: 260 பேரை கூண்டோடு கைது செய்த ஈரான்!… சாத்தானியம் மற்றும் ஆபாச கலாச்சாரத்தை பரப்பியதால் அதிரடி!

Advertisement