முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ.820 கோடி..!! வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

09:07 AM Nov 17, 2023 IST | 1newsnationuser6
Advertisement

அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என பல பலமொழிகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதிர்ஷ்டம் வந்துவிட்டால், நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் கூட நடக்கலாம். அப்படி ஒரு சம்பவம்தான், தற்போது நடந்துள்ளது. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் தவறாக டெபாசிட் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கிக் கணக்கில் 820 கோடி ரூபாய் பணம் விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

Advertisement

இந்த பணம், தவறாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது என வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பணத்தை திருப்பி எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளில் தவறாக விழுந்த 820 கோடியில் இதுவரை, 649 கோடி ரூபாய் திருப்பி எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணம் விழுந்த வாடிக்கையாளர்களின் கணக்குகளை வங்கி முடக்கியுள்ளது.

மனித தவறின் காரணமாக பணம் தவறாக விழுந்ததா அல்லது யாரேனும் ஹேக் செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து வங்கி நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. உடனடி பணம் செலுத்தும் சேவையின் (IMPS) மூலம்தான் இந்த பணம் மாற்றப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இந்த சேவை வருகிறது. நிகழ்நேரத்தில் எந்த வித தலையீடும் இன்றி, நேரடியாக நடக்கும் பண பரிமாற்றமே IMPS என அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து வங்கி அளித்த விளக்கத்தில், "மீதமிருக்கும் 171 கோடி ரூபாயை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
வங்கிக் கணக்குவாடிக்கையாளர்கள்ஜாக்பாட்
Advertisement
Next Article