For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.6000!… இன்னும் எந்தவித மெசேஜ் மற்றும் வங்கிக் கணக்கில் பணம் எதுவும் வரவில்லையா?… என்ன செய்வது?

02:36 PM Dec 24, 2023 IST | 1newsnationuser3
ரூ 6000 … இன்னும் எந்தவித மெசேஜ் மற்றும் வங்கிக் கணக்கில் பணம் எதுவும் வரவில்லையா … என்ன செய்வது
Advertisement

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக பலர் சிரமங்களுக்கு ஆளாகினர். இதையொட்டி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. மேற்சொன்ன மாவட்டங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு எந்தவித சிக்கலும் இல்லை.

Advertisement

நியாய விலை கடைகளுக்கு சென்றால் டோக்கன் தருகிறார்கள். அந்த டோக்கனில் இருக்கும் தேதி மற்றும் நேரத்திற்கு சென்றால் 6,000 ரூபாய் பணத்தை ரொக்கமாக வாங்கி கொண்டு வந்து விடலாம். இதற்கான நடவடிக்கைகள் கடந்த 17ஆம் தேதி முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கார்டு இல்லையெனில் சிறப்பு படிவங்கள் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும். அதை பூர்த்தி செய்து வழங்கினால் வங்கி கணக்கில் பணம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்காக வாடகை ஒப்பந்தம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, கேஸ் வாங்கியதற்கான பில் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட படிவத்தில் பாதிப்புகளின் தீவிரம் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதற்கு உரிய பதில்களை அளித்து நகல்களை இணைத்து நியாய விலைக் கடைகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பர் எனக் கூறப்பட்டது.

சர்க்கரை அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு பாதிப்புகள் கூடுதலாக ஏற்பட்டிருந்தால் அவர்களும் உரிய முறையில் விண்ணப்பித்து நிவாரணத் தொகையை பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5.5 லட்சம் பேர் நியாய விலைக் கடைகள் மூலம் விண்ணப்பம் செய்திருக்கின்றனர்.

இவர்களது வங்கி கணக்கில் எப்போது 6,000 ரூபாய் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முழுமையாக ஆய்விற்கு உட்படுத்தும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஆய்வு பணிகள் முடிந்ததும், அடுத்த ஒரு வாரத்திற்குள் அவர்களது வங்கி கணக்கில் நிவாரணத் தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை விண்ணப்பித்த நபர்கள் யாருக்கும் எந்தவித மெசேஜ் அல்லது வங்கிக் கணக்கில் பணம் என எதுவும் வரவில்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் 6,000 ரூபாய் வெள்ள நிவாரணத்தை பாதிப்பு ஏற்படாத மக்களுக்கு பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்று மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரி செலுத்துபவர்கள் என்று கூறினாலே ரேஷன் கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
Advertisement