”ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை”..!! பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்..!!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டதை போன்று, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.6,000 வழங்க வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் அனுமந்தபுரம் கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மரக்காணம் பகுதியில், சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாய நிலம், இறால் பண்ணைகளிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை அதிகம் பெய்திருக்கிறது நாங்கள் என்ன செய்வோம் என்று மாநில அரசு தெரிவித்திருக்கிறது. அதில் ஒரு உண்மை இருக்கிறது. ஆண்டு தோறும் மழை அதிகமாக தான் பெய்கிறது. இந்த வெள்ள பாதிப்பினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியே செல்லக்கூடிய பகுதிகள் தூர்வாரப்படாமல் உள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து ஒரே நேரத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதால் தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று கிட்டதட்ட 38 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டதை போன்று, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.6,000 வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Read More : நிலச்சரிவு எதிரொலி..!! திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நடைபெறுமா..? அமைச்சர் சேகர் பாபு உறுதி..!!