For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாஸ் அறிவிப்பு...! சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை...!

Rs.6,000 monthly stipend for top athletes
05:54 AM Sep 03, 2024 IST | Vignesh
மாஸ் அறிவிப்பு     சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ 6 000 உதவித்தொகை
Advertisement

நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளையாட்டுத்துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000/- வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.

Advertisement

குறைந்தபட்ச தகுதியாக சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். மேலும், உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான விளையாட்டுப் போட்டிகளான மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளும், அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகளும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம்/இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளாகும்.

விண்ணப்பதாரரின் வயது வரம்பு 2024 ஆகஸ்ட் மாதம் (31.08.2024) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000 இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports meet) வெற்றி பெற்றவர்கள் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறதகுதி இல்லை. விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 30.09.2024 மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

Tags :
Advertisement