For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு...!

Rs 50,000 reward for people who booked and travelled on government buses
08:11 AM Dec 09, 2024 IST | Vignesh
அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு
Advertisement

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு திட்டத்தின் கீழ், 13 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக மூன்று பேருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளது.நவம்பர் மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்துக்கான 13 வெற்றியாளர்களை கணினி குலுக்கல் முறையில், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்தார். தேர்வானோருக்கு விரைவில் பரிசுத் தொகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement