மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!
மாதம் ரூ.5 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.60,000 ஊக்கத்தொகை கிடைக்கும் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படித்து முடித்த இளைஞர்கள் சரியான ஒரு வேலைவாய்ப்பை பெறுவது சிரமமாக இருக்கிறது. அதேவேளையில், எந்த ஒரு வேலைக்கு விண்ணப்பித்தாலும் தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் அனுபவம் கேட்கின்றன. இதனால், முன் அனுபவம் இல்லாத பிரஷர்கள் இன்றைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பை பெறுவது கடினமாக இருக்கிறது.
இந்நிலையில் தான், நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் விதமாகவும், வேலைக்கான பயிற்சி வழங்கும் விதமாகவும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாக பார்க்கப்படுகிறது. அதாவது, இன்டர்ன்ஷிப் (தொழில் பயிற்சி) திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்க நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களை அரசு தேர்வு செய்துள்ளது.
இந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆண்டிற்கு ரூ.60,000 கிடைக்கும். இதில் ரூ.4,500 மத்திய அரசும், ரூ.500 சம்பந்தப்பட்ட நிறுவனமும் வழங்கும். தகுதியுள்ள இளைஞர்கள், வரும் 12ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட நிறுவனங்கள் பரிசீலனை செய்து நவம்பர் 27ஆம் தேதிக்குள் தேர்வு பட்டியலை வெளியிடும். பிறகு பயிற்சிகள் டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கும். சோதனை அடிப்படையில் இத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2024 - 2025 நிதியாண்டில் ஆண்டில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன? :
* வயது வரம்பு 21 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ, பிஃபார்ம் உள்ளிட்ட டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* வேறு எந்த நிறுவனத்திலும் முழு நேர ஊழியராக பணியாற்றக் கூடாது.
* குடும்பத்தில் யாரேனும் அரசு ஊழியராக இருந்தால் இந்த திட்டத்தின் பலனை நீங்கள் பெற முடியாது.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- * முதுநிலை பட்டதாரிகள் தொழில் பயிற்சி திட்டத்தில் சேர முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி..? விருப்பம் உள்ளவர்கள் www.pminternship.mca.gov.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Read More : நீங்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரூ.35,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!