தூள்...! ஓட்டுநர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு பிளஸ் ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு...! முதல்வர் அசத்தல் அறிவிப்பு...!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொழிலாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் ரூ. 10 லட்சம் ஆரோக்கியஸ்ரீ மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உணவு விநியோகம் செய்பவர்களுடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார். டி-ஹப்பில் உள்ள குழுக்கள் மூலம் உருவாக்கப்படும் ஓலா செயலியின் வரிசையில் வாகன ஓட்டுநர்களுக்காக ஒரு புதிய செயலி உருவாக்கப்படும் எனறார்.
சமிபத்தில் நாய் துரத்தியதில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த ஸ்விக்கி டெலிவரி செய்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ₹ரூ.2 லட்சம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி செய்யும் அவர்களிடம் பேசி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயன்றார். அமைப்புசாராத் துறையில் இருக்கும் தொழிலாளர்களின் சமூக மற்றும் வேலைவாய்ப்புப் பாதுகாப்பில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் தொழிலாளர்களுக்கு முதலமைச்சரால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் குறித்து தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிக் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ததை நினைவுபடுத்திய அவர், ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் இது தொடர்பாக ஒரு சட்டத்தை கொண்டு வந்ததாக கூறினார்.