முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.400 கோடி ஊழல்..!! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த அதிமுக..!! லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார்..!!

AIADMK has lodged a complaint against Minister Senthil Balaji for corruption of Rs 400 crore in anti-bribery department.
10:14 AM Nov 15, 2024 IST | Chella
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் வாங்குவதற்கு, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது, டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாததால் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இன்று ஐப்பசி மாத பௌர்ணமி..!! சிவலிங்கத்திற்கு சாத்தப்படும் அன்னத்தை சாப்பிட்டால் கோடி புண்ணியம்..!!

Tags :
அதிமுகசட்டவிரோத பணப்பரிவர்த்தனைசெந்தில் பாலாஜிரூ.400 கோடி ஊழல்
Advertisement
Next Article