முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுடையது: வெளியானது முதல் தகவல் அறிக்கை..! சிக்கலில் பாஜக வேட்பாளர்..!

12:57 PM Apr 15, 2024 IST | Kathir
Advertisement

சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3.99 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கில் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது. நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து சம்மனை வழங்கினார்.

இந்நிலையில் சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்ததாக தகவல். மேலும் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம்" கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல்.

Advertisement
Next Article