முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.4 கோடி விவகாரம்... விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை...! தமிழக தேர்தல் ஆணையர் தகவல்...!

06:41 AM May 08, 2024 IST | Vignesh
Advertisement

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

Advertisement

திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நயினார் நாகேந்திரன் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்; நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட ரூ.4 கோடி பணம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கும். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்; ஓவர் லோடு காரணமாகவே கண்காணிப்பு கேமராவில் பழுது ஏற்பட்டது. பின்னர் அது உடனடியாக சரி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா ஓவர் லோடு ஆகாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement
Next Article